கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் இன்று ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சகலகலாவல்லி பாடல்கள் பாடும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கம்பம் சைவ சித்தாந்தம் பன்னீர் திருமுறை அமைப்பாளர் பேராசிரியர் இராமநாதன் தலைமை தாங்கினார். நாகமணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணை செயலாளர் சுகன்யா காந்தவாசன் மற்றும் சிவமடம் ஏ.ஒன். ராமகிருஷ்ணன்,சங்கிலி ரமேஷ் முன்னிலை வகித்தனர். அடியார்கள் உமா மகேஸ்வரி உமாதேவி கீதா சுரேஷ் மற்றும் கோவில் திருப்பணி ஆளர்கள் சிவாச்சாரியார்கள் பொதுமக்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குழந்தை செல்வங்களை சகலகலாவல்லி பாடுவதற்கு சிறப்பாக பயிற்சி ஊக்கவித்த இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும், அடியார்களுக்கும், பெற்றோர்களுக்கும், வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற பதிகம் ஒப்புதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சுகுமாரன் திலகவதி குடும்பத்தார் சார்பில் நினைவு பரிசு கொடுத்து மாணாக்கர்களை ஊக்கவித்தனர். நடைபெற்றது.
இதையடுத்து சிவ மடம் ராமகிருஷ்ணன் கூறுகையில் தற்பொழுது தமிழகத்தில் அழிந்து வரும் இந்த நிகழ்வினை இந்த காலகட்டத்தில் இருக்கும் மானக்கர்கள் தக்க பயிற்சி எடுத்து இந்த சைவ சித்தாந்தத்தை வளர்க்க வேண்டும் என கூறினார்.இந்நிகழ்ச்சியினை கம்பம் சைவ சித்தாந்தம் பன்னீரு திருமுறை சிவமடம் மற்றும் சிவனடியார்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு திலகவதி சுகுமாரன் நன்றியுரை கூறினார்.விழாவினைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.