ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை (வாசெக்டமி) இருவார விழாவினையொட்டி விழிப்புணர்வு ரதத்தினை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் கவிதா ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை சூப்பிரண்டு வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



