உலக மனநல தினத்தை முன்னிட்டு ஆலடி அருணா நர்சிங் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது விழிப்புணர்வு பேரணி ஆலங்குளம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா முன்னிலையில் நடைபெற்றது பேரணியை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் கொடியசைத்து துவங்கி வைத்தார் விழிப்புணர்வு பேரணி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடை பயணமாக சென்று சக்தி நகரில் முடிவடைந்தது விழிப்புணர்வு பேரணியில் மனநல நோய் எந்தெந்த காரணங்களால் மக்களுக்கு ஏற்படுகிறது அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அடித்து மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர் விழிப்புணர்வு பேரணியில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ,தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், குத்துக்கல்வலசை திமுக ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், தென்காசி காங்கிரஸ் நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர் , காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ் ,ஈஸ்வரன் மற்றும் காங்கிரஸ், திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



