சங்கரன்கோவில். மே.2.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் உத்தரவின் படி தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது .நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர் இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நீர் , மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்வில் பொது மக்களுக்கு பழங்கள் வெள்ளரிக்காய் , நீர், மோர் வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, சேர்மன் பாலசுப்பிரமணியன்,மாணவரணி உதயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்ஆர் சரவணன், ராயல்கார்த்தி, ராஜ் , ராஜராஜன், அன்சாரி, மணிகண்டன் ,நகர அவைத் தலைவர் முப்பிடாதி, தகவல் தொழில்நுட்ப அணி ஜலால், வீரமணிகண்டன், விவசாய அணி ஸ்ரீகுமார், மின்வாரிய தொமுச திட்டச் செயலாளர் மகாராஜன் , தொண்டரணி அப்பாஸ்அலி, நகர துணை செயலாளர் சுப்புத்தாய்,வார்டு செயலாளர்கள் பாட்டத்தூர் ராமலிங்கம் ,தங்கவேலு, சதாசிவம், வீராசாமி, ராமர் , வைரவேல், தொமுச சங்கர்ராஜ், மற்றும் வெங்கடேஷ், ஜான்சன், ஜெயகுமார் ,கவுன்சிலர்கள் விஜய்குமார், ராமுராமர், அலமேலு ,செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன் கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி வெள்ளரிக்காய் பல வகைகளை மோர் பந்தலை திறந்து வைத்து ராஜா எம்எல்ஏ வழங்கினார்



