கன்னியாகுமரி அக் 4
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் நேற்று சிறப்பு வாகன தணிக்கையில்
கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர்
பிரபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர்
ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி,
விவேகானந்தபுரம் மற்றும் கொட்டாரம் பகுதியில் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதித்தபோது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கு 18 வயதுக்கும் குறைவான சிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. எனவே
18 வயது குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும் , வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இன்றியும், அதிவேகம் மற்றும் நம்பர் பலகை இல்லாத 15 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நம்பர் பலகை இல்லாத வாகனங்களுக்கு நம்பர் பலகை பொறுத்தபட்டது.
மேலும் நடைபெற்ற தொடர் சோதனையின் போது
302 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யபட்டு
ரூ 2,43,700 அபராதம் விதிக்கப்பட்டது.
4 சக்கர கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யபட்டு வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.