தருமபுரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ( 4-10-2024) வெள்ளிக்கிழமை அன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.இப் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் வியாபாரிகளும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். இக்கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், அரசாங்கம், வேலுசாமி,சாந்தமூர்த்தி, மாது ஆகியோர் கலந்து கொண்டனர்.



