தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளம் 10 வது வார்டு குலாலர் தெரு கன்னிமாரியம்மன் கோவில் தெரு அருகில் மின்கம்பம் பழுதடைந்து இருப்பதாக வார்டு உறுப்பினர் அன்னராஜ் நகர்புரம்-2 பிரிவில் 31.0.2024 அன்று கோரிக்கை வைத்துள்ளார் மேலும் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சதீஷ் மேற்கண்ட மின்கம்பத்தின் நிலை பற்றியும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தார் மேலும் வாறுகால் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் நலன்கருதியும் மின் பாதுகாப்பு கருதியும் குறிப்பிட்ட பகுதி களப்பாகுளம் பகுதி குடிநீர் மின் இணைப்பு எண் 040 -006 – 499க்குச் செல்லும் மின்கம்பமானது நகர்புறம் – 1 எல்கைகுட்பட்டது என்பதால் சங்கரன்கோவில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரிலும் உதவி செயற்பொறியாளர் தங்கராஜ் அனுமதியின் பேரில் நகர் பிரிவு உதவி பொறியாளர் கருப்பசாமி தலைமையில் பணியாளர்கள் 01.10.2024 இன்று பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றம் செய்தனர் இதனால் குலாலர் தெரு பொதுமக்களும், மின்வாரிய நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சதீஷ்,10வது வார்டு உறுப்பினர் அன்னராஜூம் மின்வாரிய அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.



