யாவரும் கேளிர் தமிழ் மன்றம் சார்பில் மூன்றாம் நிகழ்ச்சியாக சிறப்பு கவியரங்கமும் புத்தக அறிமுகமும் நடைபெற்றது!
சேலம் சாந்தாஸ்ரமம் ஹாலில் யாவரும் கேளிர் தமிழ் மன்றம் சார்பாக கவிஞர் கவிஞர் பாபு சசிதரன் தலைமையில் “மௌனம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
“யாவரும் கேளிர்” மன்றத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
நிர்வாகி கவிஞர் ஜ க நாகப்பன் வரவேற்புரையாற்ற மன்ற இணைச்செயலாளர் கவிஞர் மெய்.சீனிவாசன் நூல் அறிமுகம் செய்து மன்றச் செயலாளர் கவிஞர் ஓமலூர் பாலு தொகுப்புரை வழங்கி னார். அகில இந்திய தமிழ் சங்கம் கல்வியாளர் கோவிந்தராஜ்,பெரியார் பல்கலைக்கழகம் பேராசிரியை முத்து நகை, பேராசிரியை வசந்த மாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்துக்களும் தலைவர் கவிஞர் சூர்ய நிலா, வேட்கை இதழ் ஆசிரியர் அ.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் மௌனம் பற்றி பல்வேறு கவிஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பாக கவிதை வாசித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக யாவரும் கேளிர் மன்றத்தின் துணைத் தலைவர் கவிஞர் மாது கண்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.