திண்டுக்கல் அபிராமி லைன்ஸ் சங்கத்தின் 31 ஆம் ஆண்டு பணி ஏற்பு விழாவில் பொறியாளர் V.M.M.அசோக் குமார் அவர்கள் தலைவராகவும் பொறியாளர் V. ஸ்ரீராம் அவர்கள் செயலாளர் ஆகவும் பொறியாளர் S சரவணன் அவர்கள் பொருளாளராகவும் லயன்ஸ் சங்க கவர்னர் பொறியாளர் T.பாண்டியராஜன் அவர்கள் பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். புதிய உறுப்பினர்களாக பெ.காமராஜ் BDO , A.ராயப்பர் ரமேஷ், லோகநாதன் VAO, மைலாப்பூர் வேளாங்கன்னி, பெருமாள் மணி, A.பாலாஜி விஸ்வநாத், சீமா அசோக்ராஜ், பாலன், த. சாம்ராஜ், P. சின்னதுரை, கௌசல்யா சரவணன், S. உமேஷ் குமார் ஆகியோரை சங்கத்தில் இணைத்து முன்னாள் மாவட்ட கவர்னர் S.ராமசுப்பு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். என் எஸ் என் சுப்பையர் நினைவு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஜெனோவா அவர்களுக்கு நல்ல ஆசிரியர் மற்றும் சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. திண்டுக்கல் அருகிலுள்ள கண்ணார் பட்டியைச் சேர்ந்த பார்வையற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் 25 பேருக்கு அரிசி உள்ளிட்ட சேவை திட்டங்களை தொடங்கி வைத்து D.செல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் ஏராளமான லயன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பு செய்தனர்



