நாகர்கோவில் செப் 17
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா, சிலை கரைப்பு ஊர்வல பாதுகாப்பு பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
விநாயகர் பாதுகாப்பு அலுவலில் சிறப்பாக செயல்பட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள்,ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள்,
தனிப்பிரிவு போலீசார், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு, தொழில்நுட்ப பிரிவு, மோப்ப நாய்கள் பிரிவு, BDDS போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
மேலும் தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, மாநில பேரிடர் மீட்புக் குழு, மற்றும் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வருகை புரிந்த காவல் அதிகாரிகள் ஆளினர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்ததுடன்
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்த அனைத்து சமுதாய மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நன்றி தெரிவித்தார்.