சென்னை, செப்டம்பர், 14, தங்கும் விடுதிகளை பற்றி தரக்குறைவாக பேசிய கோ லிவ் உரிமையாளரை கண்டித்து தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் கண்டன கூட்டம் சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநிலத்தலைவர் சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாட்டில் பல்வேறு வகையான சிறுகுறு தொழில்கள் நசுக்கப்படுவதற்கு காரணமாக இருப்பது கார்பரேட் நிறுவனங்களாகும் .இந்த வகையில் தங்கும் விடுதிகள் தொழிலை நசுக்குவதற்கும் ஒழிப்பதற்கும் கோ லிவ் என்னும் நிறுவனம் செயல் பட்டு வருகிறது .
தமிழக அரசு தகவல்படி கோ லிங் நிறுவனத்திற்கு தங்கும் விடுதிகள் நடத்த உரிமம் ஏதும் வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பு கூறுகிறது. அப்படி யிருக்கும் பட்சத்தில் கோ லிவ் நிறுவனத்தின் உரிமையாளர் தனியார் விடுதிகளின் தரத்தை பற்றியும், அவர்கள் சொல்வதற்கு நேர்மாறாகவும், அறைகளை காண்பிப்பது ஒன்றாகவும், பிறகு அறையை ஒதுக்கும் போது வேறாகவும் இருக்கும் என்று தரக்குறைவாக 100 வருட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கையின் யூ டியுப் சமூக வலைதளத்தில் பேசியுள்ளார். இந்த காழ்ப்புணர்வான பேச்சை தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்கம் கண்டிக்கிறது.
மேலும் அவருடைய இந்த தரம்தாழ்ந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் .அதுவும் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பத்திரிகையில் தவறான தகவல்களை பதிவு செய்வது வெளியிடுவது மிகவும் துரதிஷ்டவசமானது கண்டிக்கத்தக்கது .
தமிழ்நாட்டில் எங்கள் தொழிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளது. இதற்காக கோ லிவ் உரிமையாளர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
அவர் அப்படி வருத்தம் தெரிவிக்காத பட்சத்தில் அவருக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கபடும் என்று தமிழ்நாடு தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் செயலாளர் வெங்கட சுப்பையா, பொருளாளர் கார்த்திக் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானமானோர் கலந்து கொண்டனர்