ஆம்பூர்,செப்டம்பர்.12, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெனட் மைதானத்தில் தேசிய சிலம்பம் பள்ளிகள் கூட்அமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம் பாட்டு கூட்டமைப்பு சார்பில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக 78 வது சுகந்திர தினத்தை ஒட்டி 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுழற்றிராயல் புக் உலக சாதனை
நிகழ்த்துவதற்காக
ஏற்பாடுகள் செய்யப்பட்டு.
தொடர்ந்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1200 மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு 78 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சி S.N.சிலம்பம் அணியின்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி மிட்டாளம் இலங்கை மறுவாழ்வு முகாம்.சின்னபள்ளிகுப்பம். மற்றும் நாச்சியார் குப்பம் சார்பாக பல்வேறு பகுதியில் மாணவர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
விளையாட்டுகள் முடிந்த பிறகு ஆம்பூருக்கு வந்துள்ள சிலம்பம் ஆசிரியர் .
எஸ்,நிராஜ்குமார் மற்றும் வீராங்கனைகளுக்கு பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.