மதுரை செப்டம்பர் 5,
மதுரை மாநகர காவல், மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையிலும், காவல் துணை ஆணையர் தெற்கு, காவல் துணை ஆணையர் வடக்கு, காவல் துணை ஆணையர் தலைமையிடம், காவல் துணை ஆணையர் போக்குவரத்து, காவல் கூடுதல் துணை ஆணையர் (CWC) ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் முகாமில் அனைத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மனுக்களை விசாரணை செய்தார்கள்.
நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 236 மனுக்கள் பெறப்பட்டன அதில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள-56, குடும்பபிரச்சனைகள்-38, வாய்தகராறு பிரச்சனைகள்-62, மற்றும் பலதரப்பட்ட பிரச்சனைகள்-80 என மொத்தம்-236 மனுக்கள் தீர்வு செய்யப்பட்டன