மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடியில் கியூப் சினிமா மற்றும் ரேடியன்ஸ் சினிமா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து மதுரையில் உள்ள ரேடியன்ஸ் சினிமாவில் தமிழகத்தின் இரண்டாவது எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கை மதுரை சிக்கந்தர் சாவடியில் மிகப் பிரபலமான முறையில் அறிமுகம் செய்தனர். இந்தியாவில் தமிழ்நாடு , ஆந்திரா மற்றும் கேரளாவில் மட்டுமே இந்த எபிக் திரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழகத்தின் இரண்டாவது எப்பிக் PLF திரை வசதி கொண்ட அரங்கு மட்டுமல்ல இந்தியாவின் நான்காவது எப்பிக் PLF திரையரங்கு ஆகும். ரேடியன்ஸ் சினிமாவில் உள்ள இந்த திரை 50 அடி அகலம், 27 அடி உயரம் கொண்ட திரை ஒரு சொகுசான சூழல் பொருந்திய அரங்கில் மிக சௌகரியமான 242 இருக்கை வசதிகளுடன் அமைக்கபட்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு இருக்கையும் திரைப்படத்தை பார்க்கும் போது சிறந்த அனுபவத்தை பெரும் படி அமைக்கபட்டுள்ளது. இந்த எப்பிக் அரங்கில் BARCO 4K RGB லேசர் புரோஜெக்ட்டர் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு காட்சியையும் மிக துல்லியமாக, அதிக பிரகாசமாக, மிக சிறந்த வண்ண அம்சங்களுடன் பார்த்து மகிழ முடியும். ஒலி அம்சத்தை பொறுத்தவரை DOLBY Atmos அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது பேசிய கியூப் சினிமாவின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹாத்கி கூறியதாவது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பார்வையாளர்களிடையே EPIQ திரையில் படம் பார்ப்பது சினிமா ரசிகர்கர்களிடையே அதிகரித்து வருகிறது. மதுரையில் கூடுதலாக, இந்த பிரீமியம் அனுபவத்தை இன்னும் அதிகமான சினிமா ஆர்வலர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவர்களின் திரைப்படம் பார்க்கும் பயணத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்படுத்துகிறோம். சினிமா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை கியூப் நிறுவனம் இதில் எப்போதுமே முன்னணியில் உள்ளது. எங்களின் பிரீமியம் திரை வசதிகள் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை அனுபவிக்க வழிவகை செய்யும். இதனால் பார்வையாளர்கள் மீண்டும் இந்த அரங்கிற்கு நிச்சயம் வர விரும்புவார்கள். இந்த அரங்கில் உள்ள திரையின் அளவு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ஒலி, ஒளி வசதிகள் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும். தென் இந்தியாவில் மேலும் பல நகரங்களுக்கு விரைவில் இந்த புது அனுவத்தை கொண்டு செல்ல உள்ளோம், என்றார். வெளியீட்டு விழாவில், ரேடியன்ஸ் சினிமாவின் நிர்வாகக் கூட்டாளர் ராம்பிரகாஷ்.எஸ் பேசுகையில், “இன்றைய நாட்களில் திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்கும் போது பார்வையாளர்கள் ஒரு தனித்துவமான அனுபவத்திற்காக ஆர்வமாக உள்ளனர். உண்மையில், அவர்கள் புதிய அனுபவத்தைப் பெற பெரிய வடிவத் திரைகளில் பார்க்க சில திரைப்படங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். சினிமா ஆர்வலர்களுக்கு R-EPIQ சரியான இடமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ரேடியன்ஸ் சினிமாவின் நிர்வாக இயக்குனர் பிகேஎம் ராஜாங்கம் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டின் போதும், ரேடியன்ஸில் EPIQ திரை மதுரைக்கு எப்போது வரும் என்பது குறித்து பார்வையாளர்கள் எங்களிடம் கேட்டு கொண்டே இருந்தனர், இப்போது அனைவரும் மிகவும் எதிர்பாக்கும் பெரிய படங்களுக்கு தயாராக உள்ளது . உலகத் தரத்தில் ஒரு சினிமா அனுபவத்தை மதுரை மக்களுக்குக் கொண்டு வந்ததில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.
இரண்டாவது எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics