மதுரை ஆகஸ்ட் 28,
மதுரை மாவட்டம் அச்சம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம், மாணவர்கள் அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்யின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். வரவேற்புரையாக சங்கர் DSW HUB TEAM நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மாணவர்கள் கைபேசி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளும் அதனால் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் நாம் தொலைபேசி எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றும், அது நல்ல காரியத்திற்காக மட்டுமே உபயோக செய்ய வேண்டும் என்றும், எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சி இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியை தங்க மீனா நன்றியுரை வழங்கினார்.



