நிலக்கோட்டை நால்ரோட்டில் கடைகள் ஆக்ரமிப்பால் வாகன நெரிசல் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் ஒரு மணி நேரம் தாமதம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ரோடுகளின் இரு புறம் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்துக் கொண்டுள்ளனர் . இந்த நிலையில் இன்று ஒரு அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அரை மணி நேரம் ரோட்டின் நடுவிலே நிற்கும் நிலை ஏற்பட்டது இதனால் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர் நால்ரோட்டில் இருந்து செம்பட்டிக்கு செல்லும் வழியில் இருபுறமும் உள்ள கடை ஆக்கிரமிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


