பொள்ளாச்சி
ஆகஸ்ட்: 20
பாலக்காடு மாவட்டம் வேலந்தாவளம் அருகில் உள்ள அகல்யா நீரிழிவு மருத்துவமனை வளாகத்தில் பொது அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, நீரிழிவு பாத நோய் சிகிச்சை பிரிவு, மற்றும் எலும்பு நோய் சிகிச்சை பிரிவு, ஆகிய துறைகள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஆகஸ்ட் 20 முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது பற்றி அகல்யா மருத்துவமனை மருத்துவர்கள் முருகானந்த், ஜெயந்தி நாதன், ஸ்ரீ கணேஷ், ராமலிங்கம், சுரேஷ் பாபு ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். சமீப காலமாக பல்வேறு நோய்களால் பாதிப்புக்கு உள்ளாகிய மக்கள் மருத்துவத்தை தேடி அலைகின்றனர் ஆகையால் அஹல்யா மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் வழங்க உள்ளோம். இதில் பௌத்திரம், மூலம், குடலிறக்கம், விரை வீக்கம், தைராய்டு வீக்கம், வயிற்று வலி, பித்தப்பை பிரச்சனைகள், கால் ரத்த நாளம் நரம்பு வீக்கம், காது மடல் பிளவு, மாறாத நீரிழிவு பாத நோய், முதுகு வலி, மூட்டு வலி, மூட்டு தேய்மானம் முதுகு தண்டுவட பிரச்சனைகள், எலும்பு நோய்கள் போன்ற நோய்களுக்கு சிறப்பான மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளோம்.
தேவைப்படும் நோயாளிகளுக்கு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் செய்தி தரப்படும் எனவும் மேலும் முகாமில் பங்குபெறும் பொது மக்களுக்கு ஆய்வகம் மற்றும் ஸ்கேன், எண்டோஸ்கோபி, கொலோனோஸ்கோபி, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளுக்கு சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம். என தெரிவித்தனர். புக்கிங் செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் புக்கிங் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9496006739 இந்த சிறப்பு வாய்ந்த மருத்துவ ஆலோசனை முகாமை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.