இராமநாதபுரம் ஆகஸ்ட் 10-
முதுகுளத்தூரில் பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம் முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் மற்றும் சாலைகளில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இது குறித்து உதவிக்கோட்டப்பொறியாளர் நவநீதகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மகேஷ்வரன் ஆகியோர் கூறியதாவது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கும், சாலைப் போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெறவும் நெடுஞ்சாலைத்துறை முதுகுளத்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாலங்கள், சாலைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள், மண் திட்டுகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றனர். சாலை ஆய்வாளர் லட்சுமணன் சாலை பணியாற்றினார்கள் உடனிருந்தார்.