தருமபுரி மாவட்டம் சேலம் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும். அருள்மிகு தோப்பு ஸ்ரீ கருணை மாரியம்மன் திருக்கோவிலில் மாரியம்மன் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இத் திருவிழாவில் மாரியம்மனுக்கு கூல் ஊற்றியும்,ஸ்ரீ மன்னார் ஈஸ்வரர் சமோதஸ்ரீ பச்சையம்மன் திரு கோவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் ,ஸ்ரீ கருணை மாரியம்மன் திருக்கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர். இவ்விழாவிற்கு விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.



