நாகர்கோவில் ஆக 8
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட சிறுவர் பூங்கா உருவாக்கப்பட்டு தினமும் மாலை நேரங்களில் உள்ளூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சிறுவர், சிறுமிகள் பூங்காவிற்க்கு வந்து கடற்கரையின் இயற்க்கையை ரசித்தும், பூங்காவில் செல்பி எடுத்து மகிழ மிகவும் அழகான முறையில் வைக்கப்பட்ட இது நம்ம ஊரு குளச்சல் செல்பி பாய்ண்ட் தற்போது உடைந்து காணப்படுகிறது. எனவே உடனடியாக இதனை முன்பு இருந்தது போல சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளச்சல் நகராட்சி இதனை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.