10 மற்றும் பிளஸ் 2 சாதனை மாணவர்களுக்கு பாராட்டு பரிசு வழங்கல்!
பெண் கல்வி முக்கியம் கல்லூரி முதல்வர் சுமையா பேச்சு!!
ராமநாதபுரம், ஆக. 6-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்வு தொண்டி இஸ்லாமிக் மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு பரிசளிப்பு வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவில் தமுமுகவின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தமுமுக தலைமை வகித்து கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார். பேராசிரியர் ரைஸ்லின் பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். தமுமுக மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் ஜிப்ரி வரவேற்றார் .தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுலாப்தீன், இஸ்லாமிக் பள்ளி தாளாளர் பொறியாளர் அபூபக்கர், அமிர் சுல்தான் அகடாமி மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.என்.எஸ்.எம். அப்துல் ரவூப் நிஸ்தார் , ஜேம்ஸ் அண்ட் கோ நிறுவனர் ஜேம்ஸ்,
ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் எல் ஆர் சி ராஜசேகர், தொண்டி பங்கு தந்தை வியாகுல அமிர்தராஜ், பைத்துல் மால் தலைவர் எஸ் சையத் அலி, ஐக்கிய ஜமாத் செயலாளர் ஹாலித், இந்து தர்ம பரிபாலன சபை துணைத் தலைவர் ராஜா மற்றும் 14வது வார்டு பேரூர் கவுன்சிலர் சமீமா பானு , 9 வது வார்டு பேரூர் கவுன்சிலர் பொறியாளர் மகஜபுல் சல்மா தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் செரிபா அபுகாரிஸ் கரிம் நவ்பல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொண்டி சையது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இஸ்லாமிக் மாதிரி மேல்நிலைப்பள்ளி, அமீர் சுல்தான் அகடாமி மேல்நிலைப்பள்ளி, வெல்கம் உயர்நிலைப்பள்ளி, கமலியா மதரசா, நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்கப்பட்டது. தேசிய அளவில் அபாகஸ் போட்டி நடைபெற்றது அப்போட்டியில் சாம்பியன் பட்டமும் மூன்றாம் இடமும் ஐந்தாம் இடமும் தொண்டி இஸ்லாமிக் மாதிரி பள்ளி மாணவர்கள் பெற்றனர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி முதல்வர் சுமையா பேசும் போது:
தற்போது டெக்னாலஜி நன்கு வளர்த்துள்ளது. அதை நல்வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. 13 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் நீங்கள் செய்யக்கூடிய சாதனைகள் தான் உங்கள் வாழ்க்கையை நிர்மாணிக்க கூடிய ஒரு நிகழ்வு. நீங்கள் வருங்காலத்தில் என்னவாக வரப்போகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய அஸ்திவாரம். நீங்கள் பெரிய சாதனைகளை செய்ய வேண்டும். எந்த ஒரு நேரத்திலும் நாம் எந்த ஒரு நிலையிலும் தடுமாற்றம் இல்லாமல் நம் வாழ்க்கை பயணத்தை மிகவும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும். இறை அச்சத்தோடு கல்வி கற்க வேண்டும். செல்போன் சீரியல் மட்டும் வாழ்க்கை அல்ல. மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க பெற்றோர்கள் நீங்கள் செய்யக்கூடிய முக்கிய பங்கு நம்பிக்கையை உங்கள் பிள்ளை மனதில் பதிய வைக்க வேண்டும். என் பிள்ளை எங்கிருந்தாலும் நன்றாக இருப்பார். என்ற விஷயத்தை பதிய வைக்க வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் நல்ல மாணவ மாணவிகளுக்கு உறுதுணையாக என்றென்றும் இருப்பார்கள். ஆளுமை திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆளுமைத் திறமை வளர்த்துக் கொண்டால் பெண்கள் எதையும் சாதிக்க முடியும்,
இவ்வாறு அவர் பேசினார்.
திருவாடானை
அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் பழனி யப்பன் சிறப்புரை ஆற்றினார்.
300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
எஸ் சையது அப்துல் காதர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தமுமுகவின் தொண்டி பேரூர் நிர்வாகிகள் ஹம்மாது மைதின், பரக்கத் அலி, அப்துல்லா, பெரியாசாமி, கல்யாணம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.