குமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆணைக்கிணங்க எல்லா வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான முதல் தேசியக்கொடி விற்பனையை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சீனியர் போஸ்ட் மாஸ்டர் அஜித் குமாரிடம் இருந்து நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி முதல் விற்பனை கொடியை பெற்றுக் கொண்டார். உடன் பாஜக மாவட்ட பொருளாளர் முத்து ராமன், ஜாக்சன் சந்திரசேகர்,ஜெகன் கலந்து கொண்டனர்.



