சங்கரன்கோவில் அருகே கோயில் விழாவில் தீ விபத்து
வெள்ளாலங்குளம் பூலுடையார் சாஸ்தா கோவில் விழா தீ விபத்தில் கால்நடைகள் உயிரிழப்பு பொருள் சேதம் ஏற்பட்டவர்களுக்கு
உரிய இழப்பீடு பெற்று தர ராஜா எம்எல்ஏ நடவடிக்கை/
சங்கரன்கோவில். ஆக.5
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளங்குளம் பூலுடையார் சாஸ்தா கோவில் விழாவில் எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் மாலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதில் கால்நடைகள் உயிர் இழப்பு மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தீ விபத்து குறித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து எம்எல்ஏவிடம் பொதுமக்கள் உயிர் இழந்த கால்நடைகள் மற்றும் சேதமடைந்த வாகனங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து பேசிய ராஜா எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியரிடம் விபத்து குறித்து உரிய விசாரணை நடத்திடவும் விபத்தில் உயிரிழந்த கால்நடைகள் மற்றும் வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளதாகவும் பொதுமக்களிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது
ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.