தருமபுரியில் இஞ்சி மேடு இறையருட் செல்வர் நூல் வெளியிட்டு மற்றும் அறிமுகவிழா நடத்தப்பட்டது. விழாவில் சிவயோகி பெருமாள் ஐ.ஏ.எஸ். அவர்கள் கலந்து கொண்டு அவருக்கு கிடைத்த சிவனருள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் திருவாசகம் ஒப்பித்தல், சிவாலய சிறப்புகள், சிவனைப்பற்றி கட்டுரை எழுதி சமர்ப்பித்தவர்களுக்கும், சிவபெருமாள் உருவ ஓவியங்கள் வரைந்தவர்களுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி சிவயோகி பெருமாள் ஐ.ஏ.எஸ். சிறப்பு செய்தார்கள். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசின் ஜி.எஸ்.டி.சேலம் கோட்ட இணை இயக்குனர் திருமதி தீப்திஸ்வராஜ், ஐ .ஆர். எஸ். அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி என்ற புத்தகத்தையும் மாணவ, மாணவிகளுக்கு அவர் வழங்கினார். நூலின் ஆசிரியர் வசந்தகுமார் விழாவை தொகுத்து வழங்கினார். விழாவில் மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி, சிங்காரவேலு, சரவணகுமார், முருகேசன் மற்றும் ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் அர்ச்சகர் சாய் எழிலரசன் அவர்கள் ஏற்பாட்டில் லில்லி அவர்களின் குழுவைச் சார்ந்த சிவன் அடிகளார் கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் கள்.



