குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தின விழா. ஒன்றிணைவோம் அறக்கட்டளை சார்பில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வணிகவியல் துறை சார்பில் உலக மகளிர் தின விழா ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் ஹென்றி ராஜா, தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை தலைவர் மெமுகான் ஞானமணி, வணிகவியல் துறை துணை பேராசிரியர் ஷீஜா, மாவட்ட உதவி ஆட்சியர் பிரியா, பூவார் மருத்துவர் செளமியா, ஒன்றிணைவோம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் செல்வன் மற்றும் சர்ஜின் வழக்கறிஞர் திஷ்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



