தருமபுரியில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் சார்பில் எம்.ஜி.ஆர். சத்துணவு பணியாளர்கள் சங்கத்தை அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைக்கும் விழா, சங்க கல்வெட்டு திறப்பு விழா, மாவட்ட மாநாடு என முப்பெரும் விழா நடைபெற்றது. சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயந்தி வரவேற்றார். நிர்வாகிகள் ராஜா, கேசவ ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைதலைவர் முனிரத்தினம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்த குமார் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். இதில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதி மாக வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ல்இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணைபணியிடத்தை ஆண்வாரிசுதாரர்களுக்கும் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் மாதம்மாள் உள்பட ஏராளமான சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் கலந்து கொண்டனர்.



