மத்திய அரசை கண்டித்து தென்காசியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடத்தப்படும் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் திமுகவினர் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அந்த வகையில் தென்காசி மாவட்ட திமுகவினர் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காமல் தமிழகத்தை புறந்தள்ளிய மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.