திண்டுக்கல்
ஜூலை: 15
திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை சார்பாக தலைவர் டாக்டர்.கே. ரெத்தினம் 65- வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள ஜி.எஸ். மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை நிறுவனர் ஜி. சுந்தரராஜன் தலைமை தாங்கினார். கவிஞர் எ.காதர் பாட்ஷா வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு செயலாளர் எஸ்.சண்முகம், இணைச் செயலாளர் எம்.திபூர்சியஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளயின் தலைவர் டாக்டர்.கே. ரெத்தினம் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் முதியவர்கள் ஆண்கள் 64 பேருக்கு வேட்டியும், பெண்கள் 64 பேர்களுக்கு சேலையும், சாலையோர கடை வியாபாரிகள் 20 நபர்களுக்கு நிழற்குடையும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 511 பேர்களுக்கு சீருடைகளும் என மொத்தம் 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் ஸ்ரீ அன்னை அபிராமி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன்,
திருப்பதி மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.