சென்னை, வடபழனியை அடுத்த விஜயராகவபுரம் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலயத்தில் ஸ்ரீ பெரியபாளையத்தம்மன், விநாயகர், முருகன், சிவன், நவக்கிரகம் பரிவார சகிதம் அனைத்தும் புதிதாக ஆலயம், மண்டபம் அமைத்து அனைத்து சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில், நிகழும் மங்களகரமானபெரியபாளையத்தம்மன் முதலான பரிவார தெய்வங்களுக்கு ஆலய நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து அருட்பிரசாதம், தீர்த்த பிரசாதம், மகா அபிஷேகம், மகா தீபாரதனை ஆகிய நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியாக பகல் 12.00 மணிக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி பிரபாகர்ராஜா கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் ஸ்டார் எம்.குணசேகரன் மற்றும் ஆனந்த் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.



