நாகர்கோவில் ஜூலை 13
குமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தளவாய் தெருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாக்டர்.பாஸ் டென்டல் நவீன தொழில்நுட்ப பல்மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நிர்வாகம் சார்பாக வரவேற்பும், நினைவு பரிசு வழங்கப்பட்டது .உடன் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் , மண்டலத்தலைவர் ஜவஹர் பகுதி செயலாளர் சேக்மீரான் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு தெரிவிக்கையில் :-
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவத்துறை சிறந்து விளங்கி வருகிறது. பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் முதல் மாநிலமாக அனைவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு நமது தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி தொகைகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
ஆங்காங்கே நடக்கும் சில கொலை களை சுட்டிக்காட்டி அரசுக்கு எதிராக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் நடப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
அதனால் தான் உலக செஸ் போட்டி தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இதில் இருந்தே இங்கு சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்க 10 லட்சம் கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு 10 லட்சம் அல்லது 20 லட்சம் வேண்டுமானாலும் முதல்வர் கொடுப்பார். கொள்கை முடிவு எடுப்பது முதல்வரின் முடிவு அதில் யாரும் தலையிட முடியாது.
அதிமுக வினர் சட்டசபையில் பேசுவது சிக்கல் என்று நினைக்கிறார்கள் அவர்களுக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை நாங்கள் அவர்களும் உள்ளே இருந்து அவர்களது கருத்தை கூற வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் அவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள்.
அதி முக்கிய பிரச்சினைகளை அதிமுகவினர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் . வரும் காலங்களில் அவர்கள் அதிக நேரம் அமர்ந்து சட்டசபையில் பேச வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.