திண்டுக்கல்
ஜூலை :10
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இனிகோ வரலாறு மன்றம் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் தந்தை எஸ். மரியநாதன் சே.ச தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் அருள்சகோதரர் எம்.ஆரோக்கியதாஸ் சே.ச., அருள் பணியாளர் எஸ். தெரஸ்நாதன் சே.ச ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் முதுகலை வரலாறு ஆசிரியர் ஆ. அமல்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜி.டி.என். கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் டாக்டர். எம்.எஸ். பாத்திமாபேகம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் லயன்.எம்.திபூர்சியஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் போது பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் நந்த கோபனுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 21-ஆம் நூற்றாண்டில் வரலாற்றின் இன்றியமையாமை பற்றியும், போட்டித் தேர்வுக்கு வரலாறு மாணவர்கள் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது பற்றியும் காணொளி காட்சி வாயிலாக விளக்கப்பட்டது. இனிகோ வரலாறு மன்ற விழா ஏற்பாடுகளை வரலாறு ஆசிரியர் ஆ.அமல்ராஜ், ஆசிரியர் அன்பரசன் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.