தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு அவசர சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணி தேனி ஒப்பந்ததாரர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இப் பணி முடியும் தருவாயை எட்டிய நிலையில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக பில்லர் சிலப் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த கார்மேகம் என்பவரது மகன் நம்பிராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் அதாவது செல்வம்,முனீஸ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் துணைக் கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் கட்டிட விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார். கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



