சங்கரன்கோவில் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலி பேக் விற்பனை பறிமுதல் அபராதம் விதிப்பு ஆய்வாளர்கள் நடவடிக்கை/
சங்கரன் கோவில் நகராட்சி நகர் பகுதியில் ராஜபாளையம் செல்லும் சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலிபேக் விற்பனை யை தடுக்கும் பொருட்டு நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி ஆய்வாளர்கள் மாரிச்சாமி , மாரிமுத்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலிபேக் வைத்திருந்த வியாபாரிகளிடம் பறிமுதல் செய்து அபராதம் விதித்து இனிமேல் மஞ்சப்பை பயன்படுத்தும்படி ஆலோசனை வழங்கினர் பாலி பேக் ஆய்வில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.