சென்னை,ஜூன்- 30, கட்டுமான நல வாரியத் தலைவரும் சமூக நீதி சத்திரிய பேரவையின் தலைவருமான பொன்குமார் பிறந்த நாளான ஜூன் 28 ஆம் நாளை கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பு தினமாக தி . நகர் சர் .பி .டி .தியாகராயர் அரங்கில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது கட்டுமான தொழிலாளர்கள் மலர் மாலை அணிவித்தும் மலர் கிரீடம் சூட்டியும் கேக் வெட்டியும் வாழ்த்துகள் தெரிவித்தனர் .
இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின்
பொதுச் செயலாளர் என்.சுந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இப் பிறந்த நாள் விழாவில்
கட்சியின் பொதுச் செயலாளர்
பொறி.எஸ்.ஜெகதீசன், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்புச் செயலாளர்
எஸ்.யுவராஜ்,
சமூக நீதி சத்திரியர் பேரவை இணைப்
பொதுச் செயலாளர் எஸ்.எம்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி
இளைஞரணிச் செயலாளர் வினோத் பொன்குமார், பொதுச் செயலாளர்கள் வி.சுப்பராயலு,
ஜெகமுருகன், பொருளாளர் ஆர்.சேகர், துணைத் தலைவர்கள் பி.கே.மூர்த்தி,
என்.லட்சுமணன், ஜெ.எல்.குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக வேளச்சேரி தொகுதி துணைத் தலைவர் மதியழகன் தலைமையில் அடையாறில் உள்ள அவ்வை இல்லத்தில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் காலை சிற்றுண்டி பழங்கள் பிஸ்கட் ஆகியவை பொன் குமார் அவர்கள் வழங்கினார் .உடன் மாநில இணைப்பொதுச் செயலாளர் எஸ். எம். குமார், தொகுதி தலைவர்கள் எஸ் .எஸ். பி. சசிகுமார், குணசேகரன்,
சேனை நிர்வாகி கலைவாணன் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.