By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம்
தூத்துக்குடிமாவட்டம்

போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம்

Last updated: June 29, 2024 12:55 pm
June 29, 2024
159 Views
Share
SHARE

தூத்துக்குடியில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை மற்றும் சில்ட்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்ட் – குடிபோதை நோயாளிகள் மறுவாழ்வு மையம் சார்பாக நேற்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வைத்து போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது. 

 

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கையெழுத்திட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பொன்னரசு, தூத்துக்குடி மனநல மருத்துவர் சிவசைலம் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர்.

 

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் ” உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பேரணி, கையெழுத்திடும் முகாம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில்   ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் செல்போன் 83000 14567 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தருபவர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

 

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  பொன்னரசு, மனநல மருத்துவர்  சிவசைலம், சில்ட்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்டின் திட்ட இயக்குனர்  நந்தினி மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  அலெக்ஸ்ராஜ், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நிரந்தர தீர்வு ஏற்படஉச்ச நீதிமன்றம் இறுதி முடிவு
புதுக்கடை அருகே வீட்டிலிருந்த சிறுவன் திடீர் மாயம்; போலீசில் புகார்
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
கோடியூர் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.60.87 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு

July 15, 2026
13 Views
பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு
பழைய பெருங்களத்தூர் ஏரி புதுப்பித்து பொது மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி
மதுரை வரும் திருப்பரங்குன்றம் முருகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account