ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை பிரிவில் திருநங்கைகளுக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஒருங்கிணைப்பாளர் மு.சதீஸ் பிரபு பேசுகையில் தங்கள் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் காப்பீடு திட்டங்கள் பெறுவதற்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் சிவகங்கை பிரேமா மதுரை நிவேதா விருதுநகர் செல்லம் தேனி செல்லமணி திண்டுக்கல் செல்வ கணேஷ் இராமநாதபுரம் பாலேஸ்வரன் ஆகியோர்களை 9087977001,02,03,04. என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



