நாகர்கோவில் ஜூன் 20
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பீச் ஜங்சனில் மீனவ காங்கிரஸ் கட்சியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி யின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. மீனவ காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்டார்வின் தலைமை வகித்தார். மீனவ காங்கிரஸ் செயல்தலைவர் லாலின், குளச்சல் நகர காங் தலைவர் சந்திரசேகர், மீனவ காங் மாவட்ட செயலாளர் ஸ்வீட்டன், மாவட்ட துணை தலைவர் ஆஞ்சிலிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, மீனவ காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தன்,மாவட்ட தலைவர் கே.டி உதயம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கேக் வெட்டி சிறப்பித்தர். மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் யூசுப் கான், மாவட்ட துணை தலைவர் தர்மராஜ், அந்திரியாஸ் ஷாபி, காப்ரின், ஆரோக்கிய ராஜ், அபிஷேக்,ராஜ், , ஜஸ்டின், ஜாக்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.