தஞ்சாவூர் ஜூன்.16.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்ச்சி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர். தீபக் ஜேக்கப் அவர்க ளின் வழிகாட்டுதலில், மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்ச்சி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத் தில் புகழ்பெற்ற கைவினைக் கலை பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் சந்தன மாலை குறித்த செய்முறை பயிற்சி முகாம் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. சந்தன மாலைகள் ஓர் அழகிய கலைப்ப டைப்பு மட்டுமல்ல, வளமான கலாச் சார பாரம்பரியத்தை பிரதிபலிப்ப தாக திகழ்கின்றன. நுணுக்கமான வடிவமைப்புடன் நறுமணம் வீசும் சந்தன மாலைகள் அனைத்து விழாக்களிலும் பெருமையாக பயன்படுத்தப்படுகின்றன.
இன்றைய தலைமுறையினர் நமது பாரம்பரிய கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வதும், அதற்கான ஆதரவினை ஊக்குவிக்க செய்வதும் தான் நோக்கமாகும்.பயிற்சியினை தஞ்சாவூர் சந்தன மாலை கலைஞர் தண்டாங்கோரை . செல்வராசு வழங்கினார். வம்பரை மரப் பவுடர், பிசின் கலந்து மாவாக்கி அச்சுகள் மூலம் மணிகள் செய்யப்பட்டு கோர்க்கப்படுகிறது. அதன் பின் சந்தன சாயத்தில் நனைத்து ஜால்ரா, பூரணி, ஜரிகை வேலைப் பாடுகள் செய்து, சந்தன மாலைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக செய்து காண்பித்தார்.
சிறியவர்கள் முதல் முதியவர் கள் வரை 35க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் சந்தன மாலையினை செய்தனர். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றது மூலம் தஞ்சாவூர் சந்தன மாலையை நாங்களே செய்து எங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்க வேண் டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது எனவும், பயிற்சி மிகவும் பயனுள்ள தாக இருந்ததாகவும் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தனர்.
நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர். சங்கர், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப் பாளர் பொறியாளர். முத்துக்குமார், மாவட்ட தொழில் மைய நிர்வாக உதவியாளர்கள் காந்தி, சிற்றரசு, மாவட்ட கள அலுவலர். பிரவீன் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.