ஐக்கிய அரபு அமீரகம் (UAE), அக்.28.
நடுவானில் விமானக் கடத்தல் முயற்சியின்போது துணிச்சலுடன் செயல்பட்ட ஃப்ளைதுபாய் விமானக் குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் உயரிய விருது வழங்கி கவுரவித்துள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின்போது, விமானக் குழுவினர் செயல்பட்ட விதத்தைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானக் குழுவினருக்கு, ‘ஆர்டர் ஆஃப் சயீத் II’ முதல் வகுப்பு விருது வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் விருதுகளை வழங்கி அவர்களைக் கவுரவித்தார்.


