திண்டுக்கல், அக்.10
திண்டுக்கல் மாவட்டத்தில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமை, திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



