திண்டுக்கல், அக், : 09
மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த ஹாரிஷா, U14 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவியான இவர், தனது வெற்றியின் மூலம் வரும் ஜனவரி 18 முதல் 23 வரை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறவுள்ள தேசியப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.மாணவி ஹாரிஷாவுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இவர் கடந்த ஆண்டும் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.



