மிசா விவகாரம்: முதல்வர் விஜய்க்கு எதிராக கிருஷ்ணகிரியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, செப்.13:
சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் அனுபவித்த மிசா கால கொடுமைகள் குறித்து தமிழக முதல்வர் விஜய் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் போராட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், வேப்பனஹள்ளி எம்எல்ஏ பாத்தகோட்டா சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டவன், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், திமுக பேரவை தலைவர் தட்றஹள்ளி நாகராஜ், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் கே.வி.எஸ்.சீனிவாசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதா நவாப் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்க்கு எதிராக திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். காவேரிப்பட்டினம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய, நகர நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் பிரிவு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.