தமிழ்நாடு, செப்.05.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமாரை, தின தமிழ் மண்டல பொறுப்பாளரும் கோவை மாவட்ட தலைமை செய்தியாளருமான முனைவர் அபு. இக்பால் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தின தமிழ் நாளிதழை அமைச்சருக்கு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களின் நலன் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தார். பத்திரிகையாளர்களின் நலத்திட்டங்கள், அவர்களுக்கான தேவைகள் மற்றும் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது.



