ஈரோடு, ஆக.24
ஈரோடு மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோடு ரெயில்வே இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத் தலைவர் சிவசங்கரன், செயலாளர் தங்கவேலு, துணைச் செயலாளர் முனைவர் கருணாநிதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



