திருப்பத்தூர், ஆக. 4 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி அண்ணா நகர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உடைந்தும், கம்பிகள் தொங்கியபடி உள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் பல முறை தெரிவித்தும் சம்பந்தப்பட்ட கொரட்டி மின் பகிர்மான அலுவலர்கள் ஆறு மாத காலமாக மெத்தன போக்காக செயல்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வரும் இப்பகுதியினை உதாசீனம் செய்து வருவதாகவும், மாதம் ஒரு முறையாவது அப்பகுதியில் மின்சாரத்துறையினர் பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. எலவம்பட்டி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் உடைந்த நிலையிலும், மின் கம்பிகள் தொங்கிய நிலையில் உள்ளது. சம்மந்தப்பட்ட கொரட்டி மின் பகிர்மானம் துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்களா? என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



