மதுரை, ஆகஸ்ட் 1 –
மதுரை மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை மற்றும் இச்சிறைகளின் கட்டுபாட்டில் உள்ள மாவட்ட, கிளை சிறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் முனைவர் ஆ. முருகேசன் முன்னிலையில் நடை பெற்றது. சிறைக்கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்நிகழ்வை ஒருக்கிணைந்து வரவேற்புரை வழங்கினர். உளவியல் நிபுணர் மற்றும் ஊக்கமுட்டும் பேச்சாளர் முனைவர் P.R. சுபாஷ் சந்திரன் அவர்கள் சிறைப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.
எண்ணங்களே நம் வாழ்வை மேம்படுத்தும் என்ற கருத்தை மையப்படுத்தி நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல் ரீதியாக விளக்கினார். நம் எதிர்பார்ப்புகள் ஈடேராமல் போகும்போது மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு என்றும் தேவையற்ற எண்ணங்களை கைவிடுவதே ஞானம் என்றும் கூறினார். மேலும் மன அழுத்தத்தை கையாளுவதற்கான எளிமையான சிறு சிறு உத்திகள் குறித்து பயிற்சி அளித்தார். இப் பயிற்சியில் 250 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



