By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கயம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நடராஜ் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காங்கயம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நடராஜ் மனு
ஈரோடுதமிழ்நாடு

காங்கயம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நடராஜ் மனு

Last updated: July 31, 2026 6:28 pm
July 31, 2026
1 View
Share
SHARE

ஈரோடு, ஜூலை 31 –

காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டப் பகுதிகளில் நிலவி வரும் முக்கிய பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ஈரோடு – பெருந்துறை – காங்கயம் (SH-96) மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், தற்போது பல இடங்களில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பிற சாலைகள் மாநில நெடுஞ்சாலையுடன் இணையக் கூடிய சந்திப்புகளில் குறுக்கு பாலப் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

மேலும், கீழ்பவானி அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், கீழ்பவானி பிரதான கால்வாயில் பசுவட்டி கிராமம் – தோப்புக்காடு அருகே மாநில நெடுஞ்சாலை கால்வாயைக் கடக்கும் இடத்தில் நடைபெற்று வரும் பாலப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் ஆகஸ்ட் 15-இல் தண்ணீர் திறக்கப்படும் போது பாசன நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இந்த சாலை மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறாததால் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியோர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சென்னிமலை பகுதியில் குடிநீர் விநியோகத்தை உடனடியாகச் சீரமைத்து, தேவையான இடங்களில் கூடுதல் மற்றும் மாற்றுக் குடிநீர் விநியோக ஏற்பாடுகளைச் செய்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், இவ்விரு கோரிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
மணப்பாறை குடும்பத்தினர் கண்டித்ததால் குடி போதை நபர் தற்கொலை
திமுக வார்டு செயலாளர் கம்பி வேலி சொந்த இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு!!
பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
மாற்றுக் கட்சியினர் மைய மாவட்ட செயலாளர் தலைமையில் தவெகவில் இணையும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா

August 29, 2024
182 Views
அமைதி அறக்கட்டளை மற்றும் பென்ச் மார்க்
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
செந்துறையிருந்து இரண்டு புதிய புறநகரப் பேருந்து
சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பாடல் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account