சென்னை, ஜூலை 30 –
நவீன கால டிஜிட்டல் காப்பீட்டு நிறுவனமான ஜூனோ ஜெனரல் இன்சூரன்ஸ், ‘இந்தியா சாலைப் பாதுகாப்பு அறிக்கை 2026-ஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஆய்வு செய்யப்பட்ட அனைத்து பெருநகரங்களிலும், கவனச்சிதறலற்ற ஓட்டுதலுக்கான அதிகபட்ச 95 மதிப்பெண்களை சென்னை பதிவு செய்துள்ளதுடன், ஒருங்கிணைந்த “ஸ்மார்ட் டிரைவ் ” மதிப்பெண்ணாக 93-ஐயும் பெற்றுள்ளது.
45 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணங்கள், 5.5 கோடி கிலோமீட்டர் ஓட்டுநர் நடத்தை மற்றும் 17 மாநிலங்களில் உள்ள “ஸ்மார்ட் டிரைவ் ” செயலியின் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்களின் தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், அடர்த்தியான நகர்ப்புற போக்குவரத்துச் சூழல்களிலும் கூட, கவனமான மற்றும் சீரான ஓட்டுநர் நடத்தை எவ்வாறு பாதுகாப்பான சாலைப் பயணங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க முடியும் என்பதை சென்னையின் இந்த வலுவான செயல்பாடு எடுத்துக்காட்டுகிறது என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஸ்மார்ட்போன் அடிப்படையிலான டெலிமேட்டிக்ஸ் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, அதிவேகம், திடீர் பிரேக்கிங், கடுமையான முடுக்கம், வளைவுகளில் திரும்புதல் மற்றும் கவனச்சிதறலுடன் வாகனம் ஓட்டுதல் போன்ற நிஜ உலக ஓட்டுநர் நடத்தைகளை மதிப்பீடு செய்கிறது. மக்கள் தொகை சார்ந்த பண்புகளை விட ஓட்டுநர் பழக்க வழக்கங்களே சாலை அபாயங்களைப் பற்றி சிறந்த புரிதலை அளிக்கின்றன என்ற பரந்த கண்ணோட்டத்தை இந்த ஆய்வின் முடிவுகள் வலுப்படுத்துவதோடு, இந்தியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு விளைவுகளை மேம்படுத்துவதற்கு நடத்தை சார்ந்த தலையீடுகளின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.


