தஞ்சாவூர், ஜூலை 30 –
தஞ்சாவூர் கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரி கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சாவூரை அடுத்துள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழக கரும்பு உற்பத்தி யாளர் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். சங்க பொது செயலாளர் திருப்பதி, செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் அர்ஜுனன், ஆலோசகர் விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிறு, குறு விவசாயிகள் பாகுபாடு இல்லாமல் கூட்டுறவு கடன் முழுவ தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டல் ஒன்றுக்கு ரூபாய் 3500 ம், கரும்புடன் ஒன்றுக்கு ரூபாய் 4500 ம், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும், 2025-26 ஆம் ஆண்டில் வெட்டிய கரும்பிற்கு விவசாயிகளுக்கு முந்திய அரசு வழங்கிய ஊக்கத் தொகையை அரசாணையாக வெளியிட்டு, கடந்த ஆட்சியில் வழங்கியது போல அக்டோபர் மாதத்திலேயே விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை மாதம் தோறும் வழங்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 2,5000 வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும். விவசாய தொழி லாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கரும்பு விவசாயிகள் அய்யாதுரை, சுதாகர், முத்துசாமி, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



