நாகர்கோவில், ஜூலை 23 –
நாகர்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து அண்ணா ஸ்டேடியம் முன்பு மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என கேட்டு காத்திருப்பு ரத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு எஸ்எப்ஐ மாவட்ட செயலாளர் சந்துரு தலைமை வகித்தார். துணை தலைவர் காவியா, துணைத் தலைவர் பிரவீன் பேசினர். மாவட்ட பொருளாளர் விஷ்ணு நிறைவுரையாற்றினார்.
இதில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் நீட் தேர்வை முறையாக நடத்த தவறிய தேசிய தேர்வு முகமைக்கு எதிராகவும், தார்மீக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறி முழக்கங்களை எழுப்பினர்.



